சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: கடலோரப் பகுதிகளில் அலையாத்திக் காடுகளைப் பாதுகாத்தல்
Posted On:
06 FEB 2025 3:37PM by PIB Chennai
ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அலையாத்திக் க் காடுகளைப்( மாங்குரோவ்)பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு (2019); வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972; இந்திய வனச் சட்டம், 1927; உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 மற்றும் இந்தச் சட்டங்களின் கீழ் அவ்வப்போது திருத்தப்படும் விதிகள் ஆகியவை அடங்கும்.
விளம்பர நடவடிக்கைகளில் "கடலோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி" உள்ளடங்கும். இது கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வாழ்விடங்களின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து, சதுப்புநிலக்காடுகளை மீட்டெடுப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் இந்திய அரசால் 2023 ஜூன் 5 அன்று தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டம் ஆகும்.
இதன் நோக்கம், 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள சுமார் 540 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான அலையாத்திக் காடுகளை மீட்டெடுப்பது/ மேம்படுத்துவதாகும். தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் மூலம் இதற்கு நிதி வழங்கப்படும்.
2024-2025 நிதியாண்டில் சீரழிந்த அலையாத்திக் காடுகளை மீட்டெடுப்பதற்காக ஆணையம் ரூ.17.96 கோடி நிதியை விடுவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த அலையாத்திக் காடுகள் பரப்பளவு 4,991.68 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இது இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் 0.15% ஆகும்.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மாநில அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100252
***
TS/PKV/AG/RR
(Release ID: 2100282)
Visitor Counter : 43