நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – இங்கிலாந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் குறித்து பயிலரங்கம்

Posted On: 06 FEB 2025 2:00PM by PIB Chennai

இந்தியா- பிரிட்டன் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஒழுங்கு முறைகள் மூலம் ஹைட்ரஜன் தரப்படுத்துதல் குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் புதுதில்லியில் நடைபெற்றது. 

இந்திய தர நிர்ணய அமைவனமானது (BIS)  பிரிட்டிஷ் தரநிலைகள் நிறுவனம் (BIS) மற்றும்  பிரிட்டன் வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பயிற்சி முகாமை நடத்தியது. தூய்மையான எரிசக்தி மாற்றங்களை அடைவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

நிலையான ஹைட்ரஜன் சந்தையை உருவாக்குவதில் இது ஒரு எடுத்துக்காட்டாகச்செயல்படுகிறது என்று பிரிட்டிஷ் தரநிலைகள்  நிறுவனத்தின் எரிசக்தி துறைத் தலைவர் திருமதி அபே டோரியன் தெரிவித்துள்ளார்.  "நிகர பூஜ்ய எதிர்காலத்தின் இலக்கை ஆதரிக்கும் வகையில், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முன்னணி வகிப்பதில் உள்ள வாய்ப்புகளை இந்தியாவும் பிரிட்டனும் பகிர்ந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் விவாதங்கள் இதில் இடம் பெற்றன. பிஐஎஸ் துணைத் தலைமை இயக்குநர்  (தரப்படுத்தல்-I) திரு ராஜீவ் சர்மா, பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்தின் காலநிலை மற்றும் எரிசக்தித் தலைவர் திருமதி லாரா அய்லெட் மற்றும்பிரிட்டிஷ் தரநிலைகள்  நிறுவனத்தின் எரிசக்தி துறைத் தலைவர் திருமதி அபே டோரியன் ஆகியோர் இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர்..

***

(Release ID: 2100208)

TS/GK/KPG/RR


(Release ID: 2100248) Visitor Counter : 17