ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யூரியா துறையில் புதிய முதலீட்டை எளிதாக்குவதற்கும் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கும் அரசு புதிய முதலீட்டுக் கொள்கை - 2012ஐ ஜனவரி 2, 2013 அன்று வெளியிட்டது, அதன் திருத்தம் அக்டோபர் 7, 2014 அன்று அறிவிக்கப்பட்டது

Posted On: 04 FEB 2025 6:51PM by PIB Chennai

யூரியாவைப் பொறுத்தவரை, புதிய முதலீட்டை எளிதாக்குவதற்கும் இத்துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்கும் அரசு புதிய முதலீட்டுக் கொள்கை (என்.ஐ.பி) - 2012-ஐ ஜனவரி 2, 2013 அன்று வெளியிட்டது, அதன் திருத்தம்அக்டோபர் 7, 2014 அன்று  அறிவிக்கப்பட்டது. என்.ஐ.பி-2012 இன் கீழ் மொத்தம் 6 புதிய யூரியா  ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன, இதில் 4  ஆலைகள் யூனிட்கள் பரிந்துரைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு  முயற்சிகளின் மூலம் அமைக்கப்பட்டது மற்றும் 2  ஆலைகள் தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டது. கூட்டு முயற்சிகள் மூலம் நிறுவப்பட்ட  ஆலைகள் தெலங்கானாவின் ராமகுண்டம் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் (RFCL) நிறுவனத்தின் ராமகுண்டம்  ஆலை மற்றும் உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் உள்ள இந்துஸ்தான் உர்வாரக் & ரசாயன லிமிடெட்டின் கோரக்பூர், சிந்திரி மற்றும் பரோனி யூரியா ஆலைகள் ஆகும். தனியார் நிறுவனங்களால் நிறுவப்பட்ட அலகுகள் மேற்கு வங்கத்தில் உள்ள மேட்டிக்ஸ் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் (மேட்டிக்ஸ்) இன் பனகர் யூரியா ஆலை மற்றும் ராஜஸ்தானில் உள்ள சம்பல் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் லிமிடெட் (சி.எஃப்.சி.எல்) நிறுவனத்தின் கடேபன்-3 யூரியா ஆலை ஆகும். இந்த அலகுகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் நிறுவும் திறன் கொண்டது. இந்த அலகுகள் சமீபத்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதால் அதிக ஆற்றல் திறன் கொண்டவை. எனவே, இந்த அலகுகள் யூரியா உற்பத்தி திறனை ஆண்டுக்கு 76.2 லட்சம் மெட்ரிக் டன்னைச் சேர்த்துள்ளன, இதன் மூலம் மொத்த உள்நாட்டு யூரியா உற்பத்தி திறன் (மறுமதிப்பீடு செய்யப்பட்ட திறன், ஆர்.ஏ.சி) 2014-15 இல் ஆண்டுக்கு  207.54 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24 இல் ஆண்டுக்கு 283.74 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

கூடுதலாக, ஆர்.ஏ.சிக்கு அப்பால் உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் 25 எரிவாயு அடிப்படையிலான யூரியா ஆலைகளுக்கான புதிய யூரியா கொள்கை (என்.யு.பி) - 2015 ஐ மே 25, 2015 அன்று அரசு  அறிவித்தது. 2014-15 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு யூரியா உற்பத்தியை விட 20-25 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக யூரியா உற்பத்தி செய்ய என்யூபி-2015 வழிவகுத்தது.

2014-15ல் ஆண்டுக்கு 225 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து யூரியா உற்பத்தியை 2023-24இiல் 314.07 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்கு மேலே உள்ள முயற்சிகள் உதவியுள்ளன.

இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099746

 

------

RB/DL


(Release ID: 2099888) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi