சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'ஹஜ் சுவிதா செயலி' மூலம் ஹஜ் யாத்திரை அனுபவத்தை மேம்படுத்தி, யாத்ரீகர்களுக்கு விரிவான சுகாதார உதவிகளை அரசு அளிக்கிறது

Posted On: 04 FEB 2025 2:36PM by PIB Chennai

ஹஜ் யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக "ஹஜ் சுவிதா செயலி" அறிமுகப்படுத்தப்பட்டது. யாத்ரீகர்கள் பயிற்சியின் உள்ளடக்கம், தங்குமிடம் மற்றும் விமான விவரங்கள், பயணங்களின் போது எடுத்துச் செல்லும் பொருட்கள் குறித்த தகவல், அவசர உதவி எண், குறை தீர்க்கும் வசதி, கருத்து தெரிவித்தல், மொழிபெயர்ப்பு மற்றும் யாத்திரை தொடர்பான பல்வேறு தகவல்களை அணுக இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் அவசரக்கால பதிலளிப்பில் உதவுவதன் மூலம் சவுதி அரேபியாவில் ஹஜ் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு இந்தச் செயலி நிர்வாக உதவியை வழங்குகிறது. மேலும் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புணர்வையும் உறுதி செய்கிறது. ஹஜ்-2024-ன் போது இந்தியாவில் இருந்து பயணம் மேற்கொண்ட மொத்தம் 1,75,025 யாத்ரீகர்களில் 78,000 க்கும் மேற்பட்டோர் இந்த செயலியில்தான் பதிவு செய்யப்பட்டனர். மேலும் 8,500 க்கும் மேற்பட்ட குறைகள் மற்றும் 2,100 க்கும் மேற்பட்ட அவசர உதவி அழைப்புகள் இந்த செயலியின் மூலம் கையாளப்பட்டன. மேலும், ஹஜ்-2024-ம் ஆண்டில், மெஹ்ராம் (ஆண் துணை) இல்லாமல் மொத்தம் 4558 பெண் யாத்ரீகர்கள் பயணத்தை மேற்கொண்டனர். இது 2018-ம் ஆண்டு ஹஜ்-ல் மெஹ்ராம் இல்லாத பெண்கள் பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அதிகமான எண்ணிக்கையாகும்.

இந்திய அரசு இந்திய யாத்ரீகர்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கு உறுதியளித்துள்ளது. மூத்த குடிமக்கள் உட்பட இந்திய யாத்ரீகர்களுக்கு நல்ல தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக ஹஜ் காலத்தில் சவுதி அரேபியாவில் பல தற்காலிக சுகாதார வசதிகளை நிறுவுகிறது.

இந்தத் தகவலை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

TS/IR/RR/KR/DL


(Release ID: 2099829) Visitor Counter : 13