கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொடக்க வேளாண் கடன் சங்கங்கள்

प्रविष्टि तिथि: 04 FEB 2025 3:32PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், கூட்டுறவு அமைச்சகம் எம்எஸ்சிஎஸ் சட்டம் 2002-ன் கீழ் மூன்று புதிய தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது:

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம்,

தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் நிறுவனம்,

இந்திய விதை கூட்டுறவு சங்கம், ஆகியவை அந்த மூன்று சங்கங்கள் ஆகும்.

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனத்தில் இதுவரை 8,863 கூட்டுறவு நிறுவனங்கள் உறுப்பினர்களாகியுள்ளன.

நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவிப்பதற்காக  இந்த நிறுவனம் பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டுள்ளது.

2024-25 நிதியாண்டில் இது ரூ.4,121 கோடி மதிப்புள்ள 36 விவசாயப் பொருட்களை 10,42,297.81 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்துள்ளது.

2023-24 நிதியாண்டில் இது ரூ.26.40 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 20% என்ற விகிதத்தில் ஈவுத்தொகையை அதன் உறுப்பினர் கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகித்துள்ளது.விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை தயாரிப்புகளை உலக அளவில் சாதகமான விற்பனைக்கு வாய்ப்புள்ள தயாரிப்புகளை அடையாளம் காண இந்தக் கூட்டுறவு நிறுவனம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் அணுகியுள்ளது, இதன் மூலம் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும்.

மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2099568

***

TS/PKV/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2099823) आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi