மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன் உற்பத்தி
Posted On:
04 FEB 2025 4:07PM by PIB Chennai
மத்திய மீன்வளத்துறை, 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு மீன்வளத் துறையில் ரூ. 20,050 கோடி முதலீட்டுடன் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மீன் உற்பத்தி, உற்பத்தித் திறன், தரம், தொழில்நுட்பம், மீன் வள உள்கட்டமைப்பு, மேலாண்மை, நவீனமயமாக்கல், மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல், இழப்புகளைக் குறைத்தல், சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு போன்றவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்கிறது.
விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வலுப்படுத்துவதற்காக, இத்திட்டத்தில் 1654.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாரம்பரிய மீனவர்கள், மீன் உற்பத்தியாளர் அமைப்பு, மீன்வளத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் மின்னணு சந்தை மூலம் தங்கள் பொருட்களை வாங்கவும் விற்கவும் அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்புடன் மீன்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நாட்டில் மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் முன்னோடித் திட்டமான பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 2024-25-ம் ஆண்டுக்குள் மீன்வள ஏற்றுமதியை ரூ 1.0 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2013-14-ம் நிதியாண்டிலிருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி ரூ.30,213 கோடியாக இருந்தது 2023-24 நிதியாண்டில் ரூ.60,523.89 கோடியாக அதிகரித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2099816)
Visitor Counter : 42