கூட்டுறவு அமைச்சகம்
இந்திய விதை கூட்டுறவு சங்க நிறுவனத்தின் தயாரிப்புகள்
प्रविष्टि तिथि:
04 FEB 2025 3:27PM by PIB Chennai
அதிக மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட விதை வகைகளை உருவாக்குவதற்காகவும் பல்வேறு பயிர்கள் மற்றும் வகைகளின் மரபணு ரீதியாக உயர் திறன் கொண்ட நல்ல தரமான இனப்பெருக்க விதைகளைப் பெறுவதற்காகவும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நடந்து வரும் மற்றும் திட்டமிடப்பட்ட ஒத்துழைப்புகளின் ஒரு பகுதியாக, பின்வரும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இந்திய விதை கூட்டுறவு சங்க நிறுவனம் ஒப்பந்தங்கள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
ஐசிஏஆர்-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், புதுதில்லி
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், லூதியானா, பஞ்சாப்
ஐசிஏஆர்-இந்திய மக்காச்சோள ஆராய்ச்சி நிறுவனம், லூதியானா, பஞ்சாப்
ஐசிஏஆர்-இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத், தெலுங்கானா.
ஜி.பி. பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பந்த்நகர், உத்தராகண்ட்
மண்டல தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் வணிக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பிரிவு, புதுதில்லி.
மேலும், இந்திய விவசாய நிலைமைகளுக்கு ஏற்ற சில இலக்கு பயிர்களில் அதிக மகசூல் தரும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மற்றும் பண்பு சார்ந்த வகைகள்/கலப்பினங்களை உருவாக்குவதில் பின்வரும் தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இந்திய விதை கூட்டுறவு சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம், வாரணாசி
இந்திய புல் மற்றும் தீவன ஆராய்ச்சி நிறுவனம், ஜான்சி
இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம், வாரணாசி
இந்திய பருப்பு ஆராய்ச்சி நிறுவனம்,கான்பூர்
உலக காய்கறி மையம், தாய்லாந்து
சுவான் பண்ணை, (தேசிய சோளம் மற்றும் சோளம் ஆராய்ச்சி மையம்), கேசெட்சார்ட் பல்கலைக்கழகம், தாய்லாந்து.
இந்தியாவில் 50%-க்கும் குறைவான விவசாயிகளே தரமான விதைகளைப் பயன்படுத்துகின்றனர், மீதமுள்ள விவசாயிகள் சேமிக்கப்பட்ட விதைகளையே பெரிதும் சார்ந்துள்ளனர். இந்த 50%-க்கும் அதிகமான இடைவெளியைக் குறைக்க, இரண்டு தலைமுறை விதைகளின் உற்பத்தி, சோதனை, சான்றிதழ், கொள்முதல், பதப்படுத்துதல், சேமிப்பு, பிராண்டிங், லேபிளிங் மற்றும் பேக்கேஜிங் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்திய விதை கூட்டுறவு சங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இதைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099561
***
TS/PKV/AG/DL
(रिलीज़ आईडी: 2099804)
आगंतुक पटल : 40