உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத்போல் இணையதளம்

Posted On: 04 FEB 2025 2:47PM by PIB Chennai

பாரத்போல் தளம் (போர்ட்டல்) 07.01.2025 அன்று இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. நாடுகடந்த குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், திட்டமிட்ட இணையதளக் குற்றங்கள், பொருளாதார மோசடி, குழந்தைகள் ஆபாசப்படம், பயங்கரவாதம் போன்றவை தொடர்பான குற்றவியல் விஷயங்களில் வெளிநாட்டு சட்ட அமலாக்க முகமைகளின் உதவியை நாடுவதற்கு இந்திய சட்ட அமலாக்க முகமைகளுக்கு உதவும் வகையில் இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.  தற்போது, பாரத்போல் தளம்  ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது

(1) இணைப்பு

(2) ஒளிபரப்பு பகுதி

(3) இன்டர்போல் குறிப்புகள் பகுதி

(4) இன்டர்போல் அறிவிப்புகள் பகுதி

(5) வளங்கள் பகுதி

இந்த ஐந்து பகுதிகளும், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யை, இன்டர்போலுடனும் மாநில விசாரணை அமைப்புகளுடனும் ஒருங்கிணைத்து தகவல் தொடர்பை எளிதாக்குகிறது.

தற்போது 51 சட்ட அமலாக்க முகமைகள், 500-க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்கள் இந்த இணையதளத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

சிபிஐ தலைமையகத்தில் 07.01.2025 அன்று இன்டர்போல் தொடர்பு அதிகாரிகளுக்கு, பாரத்போல் தளம் குறித்தும் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு குறித்தும் பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது.

07.01.2025 அன்று இந்த இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த தளம் மூலம் சட்ட அமலாக்க முகமைகளிடமிருந்து இன்டர்போல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கான 16 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, வெளிநாட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்களிடமிருந்து உதவி கோரி 08 இன்டர்போல் குறிப்பீடுகள் இந்த தளத்தின் மூலம் பெறப்பட்டுள்ளன. இந்திய சட்ட அமலாக்க முகமைகளிடமிருந்து உதவி கோரி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட 30 சர்வதேச குறிப்புகள் இந்த தளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

---

TSPLMKPGKR/DL


(Release ID: 2099791) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi