கூட்டுறவு அமைச்சகம்
சஹாரா கூட்டுறவு சங்க வைப்புத் தொகையாளர்களுக்கு ரூ. 2,025.75 கோடி திரும்பச் செலுத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
04 FEB 2025 3:31PM by PIB Chennai
சஹாரா கூட்டுறவு சங்கங்களின் 11,61,077 வைப்புத் தொகையாளர்களுக்கு 28.01.2025 வரை ரூ.2,025.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால விண்ணப்பத்தில், 29.03.2023 அன்று உச்ச நீதிமன்றம் சஹாரா கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெறுவது குறித்து உத்தரவிட்டது.
இதன்படி சஹாரா-செபி பணத்தைத் திரும்பப்பெறும் கணக்கில் உள்ள மொத்தத் தொகையான ரூ. 24,979.67 கோடியில், ரூ. 5000 கோடி கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளருக்கு மாற்றப்படும். அவர் அதை சஹாரா கூட்டுறவு சங்கங்களின் குழுமத்தின் வைப்புத்தொகையாளர்களின் சட்டப்பூர்வமான நிலுவைத் தொகைக்காக வழங்குவார். இது மிகவும் வெளிப்படையான முறையில் செலுத்தப்படும். சரியான அடையாளம் மற்றும் அவர்களின் வைப்புத்தொகைக்கான ஆதாரம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கான ஆதாரத்தை சமர்ப்பித்து, அவர்களின் அந்தந்த வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
29.03.2023 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சஹாரா குழுமத்தின் மாநில கூட்டுறவு சங்கங்களின் உண்மையான வைப்புத்தொகையாளர்களால் உரிமைகோரல்களைச் சமர்ப்பிப்பதற்காக, 18.07.2023 அன்று "சிஆர்சிஎஸ்-சஹாரா பணத்தைத் திரும்பப்பெறும் இணையதளம்" https://mocrefund.crcs.gov.in தொடங்கப்பட்டது.
இணையதளத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக அடையாளம் காணப்பட்டு மற்றும் அவர்களின் வைப்புத்தொகைக்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் சரிபார்க்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிராக சஹாரா குழும கூட்டுறவு சங்கங்களின் ஒவ்வொரு உண்மையான வைப்புத்தொகையாளருக்கும் ரூ.50,000/- வரை மட்டுமே பணம் வழங்கப்படுகிறது.
சஹாரா கூட்டுறவு சங்கங்களின் உண்மையான வைப்புத்தொகையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் அமைச்சகம் எடுத்து வருகிறது.
சஹாரா கூட்டுறவு சங்கங்களின் 11,61,077 வைப்புத்தொகையாளர்களுக்கு 28.01.2025 வரை ரூ.2,025.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099566
***
TS/PKV/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2099786)
आगंतुक पटल : 96