நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பதற்கு 17 மொழிகளில் தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண்
Posted On:
04 FEB 2025 5:13PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண்ணை நுகர்வோர் துறை புதுப்பித்துள்ளது. இந்த உதவி தொலைபேசி எண் இந்தி, ஆங்கிலம், காஷ்மீர், பஞ்சாபி, நேபாளி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மைதிலி, சந்தாலி, பெங்காலி, ஒடியா, அசாமி மற்றும் மணிப்பூரி உள்ளிட்ட 17 மொழிகளில் செயல்படுகிறது. இதன் மூலம், அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா எண் மூலம் பதிவு செய்யலாம். ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மத்திய இணையதளம், பல்வேறு வழிமுறைகள் மூலம் குறைகளைச் சமர்ப்பிக்கலாம்: வாட்ஸ்அப் (8800001915), குறுஞ்செய்தி (8800001915), மின்னஞ்சல் (nch-ca[at]gov[dot]in), தேசிய நுகர்வோர் உதவி மைய செயலி, இணையதளம் (consumerhelpline.gov.in), மற்றும் உமங் செயலி ஆகியவை நுகர்வோர் குறைகளை பதிவு செய்வதற்கு வசதி அளிக்கிறது.
தேசிய விடுமுறை நாட்கள் தவிர, வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உதவி எண் பிரத்யேகமாகச் செயல்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் திரு பி.எல். வர்மா இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2099770)
Visitor Counter : 42