கூட்டுறவு அமைச்சகம்
விவசாயிகளுக்கான மிகப்பெரிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்குதல்
Posted On:
04 FEB 2025 3:28PM by PIB Chennai
மத்திய அரசு 31.05.2023 அன்று "கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்துக்கு" அனுமதி அளித்துள்ளது. இது ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மட்டத்தில் பல்வேறு விவசாய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்ககியதாக உள்ளது. அதாவது வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணைத் திட்டம், பிரதமரின் நுண் உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் போன்றவை இதில் அடங்கும்.
இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், 11 மாநிலங்களின் 11 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் கிடங்குகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டில் சிலமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்துக்கான 1000 மெட்ரிக்டன் சேமிப்பு திறன் கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவதற்காக குளிர் சேமிப்பு அலகுகள், குளிர்பதன வேன்கள் போன்ற உள்கட்டமைப்பை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நிறுவ முடியும்.
மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இதைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099563
***
TS/PKV/AG/KR/DL
(Release ID: 2099739)
Visitor Counter : 54