எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் ‘இந்தியா ஸ்டீல் 2025’ நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஆய்வுக் கூட்டம்
Posted On:
03 FEB 2025 7:05PM by PIB Chennai
2025 ஏப்ரல் 24 முதல் 26 வரை நடைபெறவுள்ள 'இந்தியா ஸ்டீல் 2025' நிகழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க எஃகு அமைச்சகத்தின் செயலாளர் திரு சந்தீப் பவுண்ட்ரிக் தலைமையில் உயர்மட்ட பங்குதாரர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அரசு அதிகாரிகள், எஃகு மதிப்பு சங்கிலியில் உள்ள முக்கிய நாடுகளின் தூதர்கள் மற்றும் முக்கிய மாநிலங்களின் பிரதிநிதிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முன்னணி தனியார் தொழிற்சாலைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 'இந்தியா ஸ்டீல் 2025' என்பது தொழில்துறை பங்குதாரர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு ஒரு உத்திசார் தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும். இந்த நிகழ்வு இந்தியாவின் செழிப்பான எஃகு துறையை காட்சிப்படுத்தும்அதே நேரத்தில் முக்கிய சவால்கள் மற்றும் தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் வெளிப்படுத்தும்.
கூட்டத்தில் பேசிய திரு சந்தீப் பவுண்ட்ரிக், கூட்டு அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய எஃகு உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியாவின் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார். இந்தியாவின் எஃகு தேவை 9% முதல் 10% என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும், இது முக்கிய உலகளாவிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொழில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதுடன், பசுமை எஃகு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099272
*************
BR/KV
(Release ID: 2099366)
Visitor Counter : 59