சுற்றுலா அமைச்சகம்
புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை உலகளாவிய தரத்திற்கு மேம்படுத்த 2024-25 -ம் நிதியாண்டில் 23 மாநிலங்களில் ரூ. 3295.76 கோடி மதிப்பிலான 40 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது
प्रविष्टि तिथि:
03 FEB 2025 4:27PM by PIB Chennai
‘மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி – புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துதல்’ என்ற திட்டத்தின் கீழ், 2024-25-ம் நிதியாண்டில் 23 மாநிலங்களில் 40 திட்டங்களை ரூ.3295.76 கோடி மதிப்பில் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை விரிவாக மேம்படுத்துதல், அவற்றை உலக அளவில் பிரபலமடையச் செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக சுற்றுலா அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும். அதே வேளையில், அனுமதிக்கப்பட்ட திட்டங்களை தடையின்றி செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, அவ்வப்போது அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான வழிமுறையையும் சுற்றுலா அமைச்சகம் வகுத்துள்ளது.
வலைத்தளம், சமூக ஊடக விளம்பரங்கள், நிகழ்வுகளில் பங்கேற்பது, கண்காட்சிகள் மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு உதவி செய்தல் போன்ற பல்வேறு விளம்பர முயற்சிகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிகம் அறியப்படாத இடங்கள் உட்பட நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் தயாரிப்புகளை சுற்றுலா அமைச்சகம் ஊக்குவிக்கிறது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099157
***
TS/IR/AG/KV
(रिलीज़ आईडी: 2099273)
आगंतुक पटल : 74