சுற்றுலா அமைச்சகம்
ஆன்மிகத் தலங்களைப் புதுப்பித்தல்
Posted On:
03 FEB 2025 4:26PM by PIB Chennai
"ஆன்மிகத் தலங்களை புனரமைத்தல் இயக்கத் திட்டத்தின் கீழ் சுற்றுலா அமைச்சகம், முக்கியமான புனித யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 47 திட்டங்களை ரூ.1594.40 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா கணிசமான அதிகரித்துள்ளது. அயோத்தியின் சுற்றுலா புள்ளிவிவரங்களின்படி, அயோத்தி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 6,022,618 ஆக இருந்தது, 2024-ம் ஆண்டில் 164,419,522 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2016-17-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மேம்பாட்டிற்காக ரூ.13.99 கோடிக்கும் வேளாங்கண்ணி மேம்பாட்டிற்காக ரூ.4.86 கோடிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுலா, கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099155
***
TS/IR/AG/KV
(Release ID: 2099271)
Visitor Counter : 66