கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செம்மொழிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள்

Posted On: 03 FEB 2025 4:23PM by PIB Chennai

 

செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட மொழிகளுக்குக் கிடைக்கும் ஆதரவில் செம்மொழிகளுக்கான விருதுகள், செம்மொழி படிப்புகளுக்கான சிறந்த மையங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் அறிஞர் இருக்கைகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

இந்திய அரசு  பின்வரும் மொழிகளை ஏற்கனவே செம்மொழிகளாக அறிவித்திருந்தது:

தமிழ், 2004

சமஸ்கிருதம், 2005

தெலுங்கு, 2008

கன்னடம், 2008

மலையாளம், 2013

ஒடியா, 2014.

மைசூருவில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் மூலம், கல்வி அமைச்சகம், செம்மொழிகள் உட்பட அனைத்து இந்திய மொழிகளின் மேம்பாட்டிற்கும் பாடுபடுகிறது. இந்த மொழிகளுடன் தொடர்புடைய ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகளை ஆதரிக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன:

தமிழ்: 2008-ல் நிறுவப்பட்ட செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி மத்திய நிறுவனம், செம்மொழித் தமிழின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம்: இந்திய அரசு மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் மூலம் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கிறது - மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் (புதுதில்லி), ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் (புதுதில்லி), மற்றும் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் (திருப்பதி). சமஸ்கிருத கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு 2020-ல் மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.

தெலுங்கு: ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் உள்ள செம்மொழி தெலுங்கு செயல்பாடுகளின் கீழ் சிறப்பு மையம்.

கன்னடம்: செம்மொழி கன்னடத்தில் சிறப்பு மையம் கர்நாடகாவின் மைசூரில் அமைந்துள்ளது.

மலையாளம்: செம்மொழி மலையாளத்தில் சிறப்பு மையம் கேரளாவின் மலப்புரம், திரூரில் இருந்து செயல்படுகிறது.

ஒடியா: செம்மொழி ஒடியாவில் சிறப்பு மையம் ஒடிசாவின் புவனேஸ்வரில் அமைந்துள்ளது.

மேலும், மிக சமீபத்தில், 04.10.2024 தேதியிட்ட அறிவிப்பின் மூலம், மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி போன்ற 5 மொழிகளை செம்மொழிகளாக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

TS/PKV/RR/KV

 


(Release ID: 2099250) Visitor Counter : 61


Read this release in: English , Urdu , Hindi