சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: பருவநிலை இலக்குகளை அடைவதில் முன்னேற்றம்

Posted On: 03 FEB 2025 3:43PM by PIB Chennai

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான வரைவு சட்டக உடன்படிக்கை மற்றும் அதன் பாரிஸ் ஒப்பந்தம் ஆகியன நிதியாண்டு வாரியான அறிக்கைகளை வெளியிடவில்லை. ஆனால் இந்தியா, பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, 2022-ல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவிலான பங்களிப்புகளை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.

2024 டிசம்பர் 30, அன்று ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு, இந்தியா சமர்ப்பித்த 4வது ஈராண்டு புதுப்பிப்பு அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உமிழ்வு அடர்த்தி, 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய 45% என்ற இலக்கிற்கு மாறாக இப்போதே 36%-ஆகக் குறைந்துள்ளது. புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான வளங்களின் பங்கு தொடர்பான இலக்கை அடைவதற்கான நிலையைப் பொறுத்தவரை, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சார உற்பத்தி திறனில் 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய 50% இலக்கிற்கு மாறாக டிசம்பர் 2024-ல் 47.10%-ஐ அடைந்துள்ளது. 2005-ம் ஆண்டின் அடிப்படையில் ஒப்பிடும்போது, கூடுதல் காடுகள் மற்றும் மரங்கள் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 2.5 முதல் 3.0 பில்லியன் டன்கள் என்ற இலக்கை விட குறைவாக இந்தியா 2.29 பில்லியன் டன் கார்பன் உமிழ்வை எட்டியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அரசு மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்து வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், விருப்பக் கடிதங்கள், கூட்டு விருப்பப் பிரகடனங்கள், எரிசக்தி உரையாடல்கள் மற்றும் கூட்டாண்மைகள் போன்ற வழிமுறைகள் மூலம் சுற்றுச்சூழல் சீரழிவு தணிவிக்கப்படுகிறது.

2024 மார்ச் 1, அன்று கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற அதன் ஆறாவது அமர்வில், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை, நிலையான வாழ்க்கை முறைகள் குறித்த தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. மிஷன் லைஃப் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தீர்மானம் இந்தியாவால் முன்மொழியப்பட்டது,

தற்போது, இந்தியாவானது நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மியான்மருடன் எல்லை தாண்டிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. நீர்மின்சாரத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் 2006 ஜூலை 28, அன்று கையெழுத்தானது. இந்தியாவும் நேபாளமும் 04.01.2024 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு 10,000 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய உதவும்.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2099131)
TS/PKV/RR/KR


(Release ID: 2099222) Visitor Counter : 35