கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளம் கலைஞர்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 03 FEB 2025 4:21PM by PIB Chennai

கலாச்சார அமைச்சகம் பாரம்பரிய நடன வடிவங்கள், பூர்வீகக் கலைப்படைப்புகள் மற்றும் பிற பாரம்பரியக் கலை வடிவங்கள் போன்ற பல்வேறு கலாச்சாரக் களங்களில்  நிபுணத்துவம் பெற்ற இளம் கலைஞர்களை ஆதரிப்பதற்காக, 'பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை ' என்ற பெயரில் ஒரு நிதி மானியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக 400 கலைஞர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒன்று என்று 4 தவணைகளில் மாதத்திற்கு ரூ. 5,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் 18 வயது முதல் 25 வயது வரையிலானவர்களாகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு குரு அல்லது நிறுவனத்தின் கீழ் பயிற்சி பெற்று வருபவர்களாகவும் இருக்க வேண்டும். அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முன் தனிப்பட்ட நேர்காணல் / உரையாடல் மூலம் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கலாச்சார அமைச்சகம், மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து, 'கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான உதவித்தொகை திட்டம்' என்ற பெயரில் ஒரு  திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில் 'வெவ்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. 'கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான உதவித்தொகை  நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த  அதாவது கல்வெட்டு, கலாச்சாரத்தின் சமூகவியல், கலாச்சார பொருளாதாரம், நினைவுச்சின்னங்களின் கட்டமைப்பு, பொறியியல் அம்சங்கள், நாணயவியல் ஆகியவற்றில் ஆய்வு  மேற்கொள்ள கலாச்சார அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. அதன் படி கலாச்சாரத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முதுநிலை/இளநிலை உதவித்தொகை விருது, கலாச்சார ஆராய்ச்சிக்கான தாகூர் தேசிய உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099149  

***

TS/IR/AG/KR

 

 


(Release ID: 2099216) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi