பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டில் பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் பத்தாண்டு காலத்தைக் கொண்டாடுதல்

Posted On: 03 FEB 2025 12:01PM by PIB Chennai

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்   திட்டத்தின் 10-வது ஆண்டு விழாவை 2025 ஜனவரி 22 அன்று கொண்டாடியது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட  இத்திட்டம், இந்தியாவில் பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், கல்வி கற்பித்தல், அதிகாரம் அளித்தல், பாலின ஏற்றத்தாழ்வு, குறைந்து வரும் பெண்குழந்தை பாலின விகிதத்தை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் நோக்கங்களை அடைய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள் உள்ளூர் மற்றும் தொடர்புடையவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டம், அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. நீண்ட காலமாகப் பெண்களை குறிப்பாக கிராமப்புற சமூகங்களைப் பாதிக்கும் சமூக சவால்களை எதிர்கொள்கிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 100 நாட்கள் பிரச்சாரத்தின் மூலம் ஜார்க்கண்டின் பலாமு மாவட்டம் பாலின சமத்துவம், பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த பிரச்சாரமானது கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளை எடுத்துரைத்தது. இறுதியில் பெண்களின் நலன் மற்றும் உரிமைகளை மேம்படுத்தியது.

இந்த சிறப்பு 100 நாள் பிரச்சாரத்தில், பலாமு மாவட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 125 அரசு அதிகாரிகள் மற்றும் 22 களப் பிரதிநிதிகள் பங்கேற்ற நான்கு செயல்திட்டங்களும் இடம்பெற்றன. மேலும் 216 பயனாளிகளும் சேர்க்கப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099035  

***

TS/IR/AG/KR

 


(Release ID: 2099100)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati