இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருடன் பாரிஸ் பாராலிம்பிக் பதக்கம் வென்ற ரூபினா பிரான்சிஸ், ஃபிட் இந்தியா நிகழ்வில் பங்கேற்கிறார்
Posted On:
01 FEB 2025 6:49PM by PIB Chennai
இந்தியாவில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை அடுத்து, ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் முயற்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் நிகழ்வில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா, பல்வேறு குழுவுடன் இணைந்து பங்கேற்கிறார். இதில் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ரூபினா பிரான்சிஸும் பங்கேற்கிறார்.
நாளை தேசிய தலைநகரில் நடைபெறும் 2 கி.மீ சைக்கிள் ஓட்டுதல் சவாரி மேஜர் தியான்சந்த் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் டாக்டர் மண்டவியா மற்றும் ரூபினாவுடன் இணைவார்கள். இதில் முக்கிய மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், தில்லி பாரதி கல்லூரி மாணவர்கள், சோனியா விஹார் நீர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர் மகேஷ் குமார் ஆகியோரும் பங்கேற்பார்கள்.
***
(Release ID: 2098717)
PKV/RR/KR
(Release ID: 2098754)
Visitor Counter : 30