பாதுகாப்பு அமைச்சகம்
பூடான் ராணுவத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங், இந்தியாவிற்கு வருகை
Posted On:
01 FEB 2025 6:15PM by PIB Chennai
பூடான் ராணுவத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங் இன்று (01.02.2025) இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சமாக அவரது இந்தப் பயணம் அமைந்துள்ளது. வரும் 6-ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவர், இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கயா செல்லும் அவர் அங்கு அதிகாரிகள் பயிற்சி அகாடமி, பௌத்த கலாச்சார இடங்களைப் பார்வையிடுகிறார். பிப்ரவரி 2 முதல் 5 வரை, ஜெனரல் ஷெரிங் புது தில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதி, ராணுவ தலைமைத் தளபதி பாதுகாப்புத் துறைச் செயலாளர், வெளியுறவுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
தமது பயணத்தின் ஒரு பகுதியாக ஜெனரல் ஷெரிங் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு கட்டளைத் தலைமையகத்திற்கும் செல்லவுள்ளார்.
*************************
Release ID: 2098684
PLM/RR/KR
(Release ID: 2098750)
Visitor Counter : 27