மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க பட்ஜெட்டில் முன்மொழிவு
Posted On:
01 FEB 2025 5:08PM by PIB Chennai
மத்திய பட்ஜெட்டில், மீன்வளத்துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 2,703.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில், மீன்வளர்ப்பு மற்றும் கடல் உணவு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் சாதனையை எடுத்துரைத்தார்.
லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சிறப்பு கவனம் செலுத்தி பிரத்தியேக பொருளாதார மண்டலம் மூலம் ஆழ்கடல் மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை செயல்படுத்துது குறித்து பட்ஜெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள், விவசாயிகள், பதப்படுத்துபவர்கள் மற்றும் பிற மீன்வள பங்குதாரர்களுக்கு மத்திய அரசு கிசான் கடன் அட்டை மூலம் வழங்கப்படும் கடன் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கடல் உணவு சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை அதிகரிக்க கடல் உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான அடிப்படை சுங்க வரியை 30%-இருந்து 5%-ஆகக் குறைக்க பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளார். மேலும், உலகளவில் இந்திய இறால் வளர்ப்புத் தொழிலை வலுப்படுத்த, மீன் ஹைட்ரோலைசேட் மீதான இறக்குமதி வரி 15% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098615
***
PKV/GK /RJ/KR
(Release ID: 2098679)
Visitor Counter : 21