தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வலுவான பணியாளர்கள் மற்றும் வலுவான வேலைவாய்ப்பு அடித்தளங்களை உருவாக்குதல்
Posted On:
01 FEB 2025 2:32PM by PIB Chennai
2016-17 மற்றும் 2023-24 ஆண்டுக்கு இடையில் 36% அதிகரிப்பு மற்றும் சுமார் 170 மில்லியன் வேலைகள் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் வலுவான பொருளாதாரப் பாதை மற்றும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் இ-ஷ்ரம், தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் தேசிய தொழில் சேவை போன்ற திட்டங்கள் முக்கிய காரணங்களாக உள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய சாதனைகள்
2025 ஜனவரி 27-ம் தேதி நிலவரப்படி, 30.58 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் 12 திட்டங்கள் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 1.52 லட்சம் நிறுவனங்கள் மூலம் 60.49 லட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 10,188.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த டிசம்பர் 15 வரை, தேசிய தொழில் சேவை இணையதளம் மூலம் மொத்தம் 8,263 வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் 2.6 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098444
***
PKV/GK /RJ/KR
(Release ID: 2098649)
Visitor Counter : 15