கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட் இந்தியாவில் புதிய தொகுப்புகளுடன் கப்பல் கட்டுமானத்தை மேம்படுத்துகிறது: சோனோவால்

Posted On: 01 FEB 2025 4:39PM by PIB Chennai

இந்தியாவின் கப்பல் துறையின் மிகப்பெரிய திறனை உணர மத்திய பட்ஜெட் வலுவான உத்வேகத்தை அளித்துள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர், திரு சர்பானந்தா சோனோவால் பட்ஜெட்டை வரவேற்று, 2047-ம் ஆண்டிற்குள் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான திட்டத்தை நனவாக்கும் முற்போக்கான கொள்கை அறிக்கை என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை தாம்  வரவேற்பதாகவும், இந்த பட்ஜெட், பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா, தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கியாக உள்ளது என்று கூறினார். இந்த வரவு செலவுத் திட்டம் வர்த்தக உணர்வை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பொருளாதார விரிவாக்கம், திறன் மேம்பாடு மற்றும் சமூகத்தின் தீர்வு சார்ந்த முழுமையான வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான ஊக்கியாகவும் செயல்படுகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் கடல்சார் துறையை ஆதரிக்க கடல்சார் மேம்பாட்டு நிதியை அமைக்க மத்திய பட்ஜெட் முன்மொழிகிறது. இந்த நிதியின் ஆரம்பத் தொகை ரூ.25,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .- இதில் அரசின் பங்களிப்பு 49% ஆகும். மீதமுள்ள நிலுவைத் தொகையை முக்கிய துறைமுக அதிகாரிகள், பிற அரசு நிறுவனங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் பங்களிக்க வேண்டும். இது 2047-ம் ஆண்டளவில் உலகளாவிய சரக்கு கப்பல்களில் இந்தியக் கப்பல்களின் பங்கை 20% வரை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2030க்குள், கப்பல் துறையில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டை உருவாக்குவதை கடல்சார் மேம்பாட்டு நிதி இலக்காகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் கடல்சார் துறையை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்துப் பேசிய கப்பல் போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், “இந்தியாவின் கடல்சார் துறைக்கான பட்ஜெட் முயற்சிகள் அதன் பரந்த திறனைத் திறப்பதிலும், தற்போதுள்ள சொத்துக்களை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் மூலம் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த உறுதியளிக்கிறது என்று கூறினார். தமது அமைச்சகம் 1.0 முதல் 1.2 மில்லியன் மொத்த டன் வரையிலான புதிய கப்பல் கட்டும் தொகுப்புகளை உருவாக்கியுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் பார்வையை நனவாக்க இந்த  திட்டமிடல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098573

***

IR/AG/KR

 

 


(Release ID: 2098640) Visitor Counter : 44


Read this release in: English , Urdu , Hindi , Assamese