பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் மகளிருக்கு அதிகாரமளித்தலில் முன்னேற்றங்கள்

Posted On: 01 FEB 2025 2:58PM by PIB Chennai

மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பெண்களின் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. மிஷன் சக்தி போன்ற முக்கிய திட்டங்கள் சிறப்பு மையங்கள் மூலம் 10.61 லட்சம் பெண்களுக்கு ஆதரவளித்துள்ளன.

அதே நேரத்தில் மகளிர் உதவி எண் 181, (181-WHL) லட்சக்கணக்கான பெண்களுக்கு உதவியுள்ளது. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (BBBP) திட்டம் பிறப்பு பாலின விகிதத்தை (SRB) ஆயிரத்துக்கு 918 (2014-15) என்பதில் இருந்து 930 (2023-24) ஆக மேம்படுத்த பங்களித்துள்ளது.

மேலும் இதே காலகட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 75.51 சதவீதத்திலிருந்து 78 சதவீதமாக உயர்ந்துள்ளது. சகி நிவாஸ் திட்டம் பணி செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்குகிறது.

மிஷன் சாக்ஷம் அங்கன்வாடி, போஷன் 2.0 ஆகிய திட்டங்கள் 9.88 கோடி பயனாளிகளுக்கு ஆதரவளிக்கின்றன. 6.77 லட்சம் அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களைக் கொண்டுள்ளன.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பொருளாதாரம், கலாச்சாரம், சமூகம், அரசியல் என வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் செயல்முறையாகும். இது அவர்களின் தனிப்பட்ட திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது. பெண்கள் அதிகாரமளிப்பதில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக இருக்கும் சில முக்கிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைய தள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098463

https://wcd.gov.in/documents/uploaded/1732020683.pdf

https://missionshakti.wcd.gov.in/

**********

Release ID: 2098463

PLM/RR/KR

 

 


(Release ID: 2098626) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi