பாதுகாப்பு அமைச்சகம்
பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு சாதனை அளவாக ரூ.6.81 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
Posted On:
01 FEB 2025 3:00PM by PIB Chennai
2025-26 நிதியாண்டுக்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,81,210.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த நிதியாண்டை விட 9.53% அதிகமாகும்.
இதில், ரூ.1,80,000 கோடி பாதுகாப்பு சேவைகளுக்கான மூலதனச் செலவினத்திற்காக செலவிடப்படும். ஆயுதப் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.3,11,732.30 கோடியாக இருக்கும். பாதுகாப்புத்துறையினர் ஓய்வூதியத்திற்கு ரூ.1,60,795 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.28,682.97 கோடி பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுதப் படைகளை நவீனமயமாக்க பயன்படுத்தப்படும்.
பட்ஜெட் குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட்டை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். "இந்த பட்ஜெட் இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098485
***
TS/GK /RJ/KR
(Release ID: 2098618)
Visitor Counter : 32