இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் நலன், விளையாட்டு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியடையும் கவனம்
Posted On:
01 FEB 2025 2:49PM by PIB Chennai
“நானும் நீங்களும், நாம் அனைவரும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும். இந்தக் கனவை நனவாக்க குறிப்பாக இளையோரை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
~ பிரதமர் திரு நரேந்திர மோடி
உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலகில் 35 வயதுக்குட்பட்ட 65% பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்த திறனை உணர்ந்து, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளைஞர் நலத்துறை - இளைஞர்களை தலைமைத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபடுத்துகிறது.
விளையாட்டுத் துறை - உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது, விளையாட்டு வீரர்களை ஆதரிக்கிறது மற்றும் போட்டி விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது.
பல ஆண்டுகளாக, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், விளையாட்டுப் பங்கேற்பை மேம்படுத்தவும், விளையாட்டில் இந்தியாவின் சர்வதேச நிலையை மேம்படுத்தவும் அமைச்சகம் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. 2004-05ல் ரூ. 466 கோடி அளவிற்கும், 2023-24 நிதியாண்டில் ரூ.3397.32 கோடி அளவிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 11% அதிகரிப்பைக் குறிக்கிறது மற்றும் 2010-ம் ஆண்டிற்குப் பிறகு இதுவே அதிகபட்ச ஒதுக்கீடாகும்.
2016-17-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம் நாடு முழுவதும் விளையாட்டுகளில் மக்கள் பங்கேற்பு, சிறந்து விளங்குவதை ஊக்குவிக்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த திட்டம் விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதையும், நாடு முழுவதும் விளையாட்டு சிறப்பை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இது நாடு முழுவதும் விளையாட்டு பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098454
***
IR/AG/KR
(Release ID: 2098599)
Visitor Counter : 34