புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்தியாவில் எரிசக்திப் பாதுகாப்பில் முன்னேற்றங்கள்
Posted On:
01 FEB 2025 2:30PM by PIB Chennai
நாட்டில் அரசின் முக்கிய முயற்சிகள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேம்பட்டுள்ளது. ஜனவரி 2025 நிலவரப்படி, நாட்டின் புதைபடிவமற்ற எரிபொருள் எரிசக்தி திறன் 217.62 ஜிகா வாட்டை எட்டியுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியும் கணிசமாக மேம்பட்டுள்ளது. இது 48.16 ஜிகா வாட் திறனைக் கொண்டுள்ளது.
2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், ரூ. 8 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுடன் ஹைட்ரஜன் எரிசக்தியில் உலகளாவிய முன்னணி நாடாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது. தேசிய சூரிய சக்தி இயக்கம் சூரிய மின்சக்தி வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றுள்ளது.
சூரிய மின் சக்தித் திறன் 2016- ல் 9.01 ஜிகா வாட்டாக இருந்தது. 2025-ம் ஆண்டில் இது 97.86 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, பிரதமரின் குசும் திட்டம், பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை வீடுகள் திட்டம் ஆகியவை விவசாயிகளிடமிருந்தும் வீடுகளில் இருந்தும் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்து அவற்றை வாங்குவதை துரிதப்படுத்துகின்றன. கணிசமான அரசின் நிதியாலும் கொள்கை நடவடிக்கைகளாலும் ஆதரிக்கப்படும் இந்த முயற்சிகள், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் அதே வேளையில் எரிசக்தி பாதுகாப்பை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.
தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் உத்தி சார் முதலீடுகளையும் மேம்படுத்துவதன் மூலம், இந்தியா தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098441
https://npp.gov.in/dashBoard/cp-map-dashboard
https://mnre.gov.in/en/year-wise-achievement/#
https://www.india.gov.in/spotlight/national-green-hydrogen-mission
https://mnre.gov.in/en/national-green-hydrogen-mission/
https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=151902
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2089056
https://ccdcwind.gov.in/potential_of_wind_energy_in_india.html
https://cdnbbsr.s3waas.gov.in/s3716e1b8c6cd17b771da77391355749f3/uploads/2024/05/20240524405410771.pdf
https://cdnbbsr.s3waas.gov.in/s3716e1b8c6cd17b771da77391355749f3/uploads/2023 /08/2023080324.pdf
https://cdnbbsr.s3waas.gov.in/s3716e1b8c6cd17b771da77391355749f3/uploads/2024/10/20241029512325464.pdf
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2094992
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1943905
https://mnre.gov.in/en/bio-gas/
https://pmkusum.mnre.gov.in/
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2081250
https://www.pmsuryaghar.gov.in/
https://cag.gov.in/uploads/download_audit_report/2015/Union_Civil_Performance_Renewable_Energy_Report_34_2015_chap_8.pdf
https://powermin.gov.in/sites/default/files/uploads/ar03_04.pdf
***************
Release ID: 2098441
PLM/RR/KR
(Release ID: 2098597)
Visitor Counter : 10