வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் புத்தொழில் புரட்சி

Posted On: 01 FEB 2025 2:44PM by PIB Chennai

இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்கள் மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.

1.57 லட்சம் புத்தொழில் நிறுவனங்களின் மூலம் 17.28 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2024 டிசம்பர் 31 நிலவரப்படி புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கா தொழில் - உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் 1.57 லட்சத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு கொண்ட நாடாக இந்தியா தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

புத்தொழில்களுக்கான முக்கிய திட்டங்கள், முன்முயற்சிகள்:

ஸ்டார்ட்அப் இந்தியா:

2016 ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம், புதுமைகளை வளர்ப்பதற்கும், செழிப்பான புத்தொழில் அமைப்பை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது.

ஸ்டார்ட்அப் இந்தியா முதலீட்டு நிதித் திட்டம் (SISFS) :

2021-ம் ஆண்டு ரூ. 945 கோடி நிதியுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கிறது. இது நிதி ஒதுக்கீட்டிற்கான தொழில் பாதுகாப்பகங்களை மதிப்பீடு செய்து தேர்ந்தெடுக்கிறது. இத்திட்டத்தில் மொத்தம் 2,622 புத்தொழில் நிறுவனங்கள் ரூ. 467.75 கோடி நிதி பெற்றுப் பயனடைந்துள்ளன.

 

புத்தொழில் நிறுவனங்களுக்கான எஃப்எஃப்எஸ் திட்டம், கடன் உத்தரவாதத் திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. எதிர்காலத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்கள் இன்னும் பெரிய மைல்கற்களை எட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098452

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093125

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1886031

https://msh.meity.gov.in/

https://aim.gov.in/overview.php

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU3820_406x3D.pdf?source=pqals

https://www.startupindia.gov.in/

******

Release ID: 2098452

PLM/RR/KR


(Release ID: 2098587) Visitor Counter : 112
Read this release in: Hindi , English , Urdu