பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு துறையில் தற்சார்பு இந்தியா

प्रविष्टि तिथि: 01 FEB 2025 2:13PM by PIB Chennai

இந்தியாவின் பாதுகாப்புத் துறையானது 2014-ம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. பெருமளவில் இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் பாதுகாப்பு துறை தன்னிறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகளவில் வலிமையான இராணுவ சக்திகளில் ஒன்றாக, பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் திட்டமிட்ட இலக்குகளை நிறைவேற்றுவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. 2013-14ல் ரூ.2,53,346 கோடியாக இருந்த நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட், குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டு, 2024-25ல் ரூ.6,21,940.85 கோடியை எட்டியது. இது நாட்டின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கான தெளிவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

2023-24-ம் நிதியாண்டில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட  உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியது. இது 2014-15ல் ரூ.46,429 கோடியில் இருந்து சுமார் 174% அதிகரித்து சாதனை படைத்தது.

 

நடப்பு நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ரூ.1.75 லட்சம் கோடி இலக்கை எட்டுவதற்கான திசையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது.

 

2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2014-15 நிதியாண்டில் ரூ.1941 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஏற்றுமதி மதிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் 32.5% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது முந்தைய 2022-23 நிதியாண்டில், ரூ.15,920 கோடியிலிருந்து உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098431

***

TS/IR/AG/KR


(रिलीज़ आईडी: 2098569) आगंतुक पटल : 91
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी