எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையை மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்கள் துறை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி பார்வையிட்டார்

Posted On: 31 JAN 2025 2:50PM by PIB Chennai

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு  தொழிற்சாலையை மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்கள் துறை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி, இந்த துறையின் இணையமைச்சர் திரு பூபதிராஜூ சீனிவாச வர்மா ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிறுவனம் லாபம் ஈட்டும் நிலையை நோக்கி முன்னேறும் என்று அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் திரு குமாரசாமி, இந்த நிறுவனம் முன்னேறுவதற்காக கடந்த 3 மாதங்களாக உற்பத்தி பிரிவில் தொழிலாளர்கள் கடின உழைப்பு செலுத்தியதற்கு பாராட்டு தெரிவித்தார்.  இந்த நிறுவனத்தை மறுசீரமைக்க ரூ.11,440 கோடி தொகுப்பு திட்டத்தை வழங்கிய பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097940

***

SMB/AG/DL

 


(Release ID: 2098289) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi