வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்புடன் இசைந்தவகையில் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் ஏற்றுமதியை முறைப்படுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 31 JAN 2025 5:06PM by PIB Chennai

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்புடன் இசைந்தவகையில் ஏற்றுமதியை முறைப்படுத்த வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கான கண்காணிப்பு தொடர்பான நடைமுறை வெளிநாட்டு வர்த்தக  கொள்கையின்படி திரும்பப்  பெறப்படுகிறது.

இந்த நடைமுறை 2011 ஜனவரி 10 அன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் செல்லத்தக்க தன்மை 2025 பிப்ரவரி 1 வரை கடைசியாக நீட்டிப்பு செய்யப்பட்டது.

இப்போதைய நடவடிக்கையின் மூலம் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கான வணிகத்தை எளிதாக்குவதை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் விரிவுபடுத்தியுள்ளது. அதே சமயம் ஒழுங்குமுறை இசைவை உறுதிசெய்கிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098042

***

SMB/AG/DL


(रिलीज़ आईडी: 2098271) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी