கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியாவின் கடல்சார் வலிமைக்கு பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம்: திரு சாந்தனு தாக்கூர்
Posted On:
31 JAN 2025 7:00AM by PIB Chennai
இந்தியாவின் கடல்சார் வலிமையில் பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம் என்று கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். பெண்கள் கடலோரப் பாதுகாப்புப் பணிகளில் தன்னம்பிக்கையுடனும் சிறப்புடனும் செயல்பட்டு உலகளவில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள இந்திய கப்பல் கழகத்தில் பணியாற்றுபவர்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நிதியுதவித் திட்டம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இலட்சினைகளையும் கருப்பொருள்களையும் வெளியிட்ட அவர், நீண்ட காலம் குடும்பத்திலிருந்து விலகி கடலில் பணியாற்றும் பெண்கள் தேவையான மரியாதையைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
யோகக்கலை இந்திய பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடற்பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகளை மாலுமிகள் எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். நாட்டின் கடல்சார் பாதுகாப்பில் உறுதியான முன்னேற்றத்தை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் வகையில் முக்கிய தூதுவர்களாக அவர்களை உருவாக்குவதே இத்தகைய திட்டங்களின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
கடல்சார் இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வை 2030 என்ற பிரதமரின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார்.
"கடல்சார் யோகா" திட்டம் கப்பலில் பணியாற்றுபவர்கள் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்த உதவும். கடல்பணிக்கு முன்னதாக அல்லது கடல் பணியின்போதோ அல்லது அதற்குப் பின்னரோ யோகக் கலையை பின்பற்றுவதன் மூலம் அவர்களது மன மற்றும் உடல்நலங்கள் மேம்படுகிறது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097792
----
TS/SV/KPG/KR
(Release ID: 2097927)
Visitor Counter : 10