புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசாரா துறைகள் மதிப்பீடு குறித்து அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் பிற பங்குதாரர்களுடனான ஆலோசனை நடைபெற்றது.
प्रविष्टि तिथि:
30 JAN 2025 6:56PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய கணக்குப் பிரிவு, 2025 ஜனவரி 30 அன்று புதுதில்லியில் ஆலோசனை மேற்கொண்டது.
2011-12 முதல் 2022-23 வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படை ஆண்டை திருத்துவதற்கான அமைச்சகத்தின் தற்போதைய முயற்சி குறித்த ஆலோசனையை விரிவுபடுத்துவதற்காக இந்த ஆலோசனை ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருளாதாரத்தின் முறைசாரா துறையின் மதிப்பீட்டில் முறையை மேம்படுத்துவது மற்றும் புதிய தரவு ஆதாரங்களை இணைப்பது குறித்து விவாதிப்பதை இது நோக்கமாகக் கொண்டது. தேசிய கணக்கு புள்ளிவிவரங்களின்படி, 2022-23-ம் நிதியாண்டில் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசாரா துறை சுமார் 45% பங்களித்தது. தொழிலாளர் கண்ணோட்டத்தில், 2023-24-ம் ஆண்டில் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, வேளாண் துறை அல்லாத மற்ற துறையில் சுமார் 61% பெண் தொழிலாளர்கள் முறைசாரா துறை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
பயிலரங்கின் தொடக்க அமர்வில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு சஞ்சீவ் சன்யால் கலந்து கொண்டார், அவர் தனது முக்கிய உரையில், பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் முறைசாரா தன்மையின் மாறிவரும் தன்மையை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097693
----
TS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2097728)
आगंतुक पटल : 69