புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டு நுகர்வுப் பொருட்கள் செலவு கணக்கெடுப்பு: 2023-24

प्रविष्टि तिथि: 30 JAN 2025 4:00PM by PIB Chennai

நாட்டின் முக்கிய மாநிலங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கிடையேயான நுகர்வுப் பொருட்கள் செலவு வேறுபாட்டில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகிறது.

கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து வித வீடுகளிலும் சராசரியாக மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு அதிகரித்து வருகிறது. 

நகர்ப்புறம், கிராமப்புறங்களில் இந்தச் சமநிலையற்ற தன்மை குறைந்து வருகிறது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடத்த திட்டமிட்டு இருந்த குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்த தொடர் கணக்கெடுப்புகளில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 2024-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.  முன்னதாக 2022-23-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விரிவான அறிக்கை 2024-ம் ஆண்டு  ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

வீட்டு நுகர்வு செலவுகள் குறித்த கணக்கீடுகள் பொருட்கள் மற்றும் சேவைகளில் குடும்பங்களின் நுகர்வு, செலவு குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணைக் கணக்கிடுவதற்கும் இந்தத் தரவுகள் உதவுகின்றன.  சேகரிக்கப்பட்ட தரவுகள் வறுமை, சமத்துவமின்மை, சமூக விலகல் போன்ற அம்சங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097601

***

TS/SV/AG/DL


(रिलीज़ आईडी: 2097702) आगंतुक पटल : 109
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati