அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஹரிமன் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது : இந்தியாவின் ஆப்பிள் மனிதர்

Posted On: 27 JAN 2025 4:16PM by PIB Chennai

இந்திய விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பங்களித்தற்காக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி திரு ஹரிமன் சர்மாவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. எச்.ஆர்.எம்.என் - 99 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புதுமையான, சுய மகரந்தச் சேர்க்கை, குறைந்த குளிர்நிலை கொண்ட ஆப்பிள் வகையை அவர் உருவாக்கினார். இது நாட்டில் ஆப்பிள் சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகுபடிக்கு உகந்த, குறைந்த விலையிலான சாறு அதிகம் நிறைந்த ஆப்பிள் வகை இதுவாகும்.

மிதமான தட்பவெப்பநிலை, குளிர் அதிகம் உள்ள பிரதேசங்களில் விளையும் ஆப்பிள் வகைகளை போன்று அல்லாமல், இந்த புதிய ஆப்பிள் வகை வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் சமவெளி பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. கோடைகாலத்தில் நிலவும் 40-45 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையையும் தாங்கி வளரக்கூடியது.

குழந்தைப் பருவத்தில் ஆதரவற்ற நிலையில் வளர்ந்த ஹரிமன் ஷர்மா, பிலாஸ்பூரில் (இமாச்சலப் பிரதேசம்) அமைந்துள்ள தனது சிறிய குக்கிராமமான பனியாலாவின் மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான அவரது பயணம் விவசாயிகள் மட்டுமின்றி, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தோட்டக்கலை நிபுணர்கள் ஆகியோருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.

இந்தப் புதிய ஆப்பிள் வகையானதூ வீட்டு நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் நிராகரிக்கப்பட்ட ஆப்பிள் வகைகளிலிருந்து சில விதைகளை நடவுசெய்தபோது இந்த புதிய ஆப்பிள் வகை கண்டறியப்பட்டது.

திரு. ஹரிமன் ஷர்மாவின் தனித்துவமான கண்டுபிடிப்பு இந்தியாவில் ஆப்பிள் சாகுபடியில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தையும் அளித்துள்ளது. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும் உள்ளது. அவரது முயற்சியால், ஒரு காலத்தில் பணக்காரர்களின் உணவாக கருதப்பட்ட ஆப்பிள் சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மலிவான விலையில் கிடைக்கிறது. பத்மஸ்ரீ விருது மூலம் அவரது முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரம், விவசாயம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதிலும், நீடித்த வாழ்வாதாரங்களை உருவாக்குவதிலும், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளுடன் இணைந்து  அமையும் கண்டுபிடிப்புகளுக்கான சான்றாக திகழ் கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096693

***

TS/SV/AG/DL


(Release ID: 2096744) Visitor Counter : 42


Read this release in: English , Urdu , Hindi