ஜல்சக்தி அமைச்சகம்
"நீர் பயன்பாட்டுத் திறன்: நீடித்த எதிர்காலத்திற்கான உத்திகள்" என்ற பயிலரங்கை மத்திய அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
Posted On:
27 JAN 2025 3:17PM by PIB Chennai
ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கத்தின் கீழ் உள்ள நீர் பயன்பாட்டுத் திறன் பணியகம், இந்திய பிளம்பிங் சங்கத்துடன் இணைந்து, உள்நாட்டு நீர்த் துறையை மையமாகக் கொண்டு, "நீர் பயன்பாட்டு திறன்: நிலையான எதிர்காலத்திற்கான உத்திகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கு புதுதில்லி சன்சாத் மார்க், பாலிகா கேந்திராவில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கை மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தொடங்கி வைத்தார். புதுமையான அணுகுமுறைகள், கூட்டு முயற்சிகள் மூலம் நீர் சேமிப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை அமைச்சர் அப்போது எடுத்துரைத்தார். இந்தப் பயிலரங்கில் பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், நிபுணர்கள், பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். உள்நாட்டில் நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
கொள்கை முன்முயற்சிகள், பல்துறை கூட்டாண்மைகளின் தேவை குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் ஆதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை செயலாளர் முக்கிய உரை நிகழ்த்தினார்.
இந்தப் பயிலரங்கில் 350 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், 20-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள், பேச்சாளர்கள் நுண்ணறிவு விளக்கக்காட்சிகளை வழங்கினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096673
***
TS/IR/RJ/KR
(Release ID: 2096699)
Visitor Counter : 33