பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான பிரதமரின் விருதுகளுக்கான இணையதளம் தொடக்கம்

Posted On: 20 JAN 2025 6:50PM by PIB Chennai

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான பிரதமரின் விருதுகள் 2024-க்கான இணையதளம் (http://www.pmawards.gov.in) இன்று நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் தொடங்கப்பட்டது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறை அதிகாரிகள், மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் (நிர்வாக சீர்திருத்தங்கள் / தகவல் தொழில்நுட்பம்) மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் / மாவட்ட நீதிபதிகள்  கலந்து கொண்டனர்.

பிரதமர் விருதுகள் இணைய தளத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் இன்று (2025 ஜனவரி 20 )முதல் தொடங்கியுள்ளது. 2025 ஜனவரி 27, முதல் விருதுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் 2025 பிப்ரவரி 14 ஆகும்.

பொது நிர்வாகத்தில் சிறப்பு தகுதி நிலைக்கான பிரதமரின் விருதுகள் 2024 திட்டத்தில் அனைத்து மாவட்டங்களும் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஏப்ரல் 1 முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் பொது நிர்வாகத்தில் சிறப்பு தகுதி நிலைக்கான விருதுகள்  மொத்த எண்ணிக்கை 16 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094589

***

TS/IR/AG/DL


(Release ID: 2094634) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi , Marathi