மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட இடையூறு ஏற்படுத்தல், கண்ணியக் குறைவு, நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவை குறித்து மக்களவை சபாநாயகர் கவலை தெரிவித்தார்

Posted On: 20 JAN 2025 5:41PM by PIB Chennai

மக்களவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு இடையூறு விளைவிப்பது, அமர்வுகளின் எண்ணிக்கை குறைதல் ,நாடாளுமன்றத்திற்கான கண்ணியம் குறைந்து வருதல் ஆகியவல குறித்து மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கவலையும், வேதனையும் தெரிவித்தார். நாடாளுமன்றம் விவாதங்களுக்கானது என்றும், மக்கள் தங்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை உறுப்பினர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று கூறிய மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நாடாளுமன்றமானது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவதில் பின்தங்கியுள்ளது என்று எச்சரித்தார். நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும், மக்களின் குரல் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதி செய்வதற்கும் திறமையான திட்டமிடல் மற்றும் நாடாளுமன்ற நேரத்தை திறம்பட பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் உறுப்பினர்களை வலியுறுத்தினார். நமது அவைகளின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் பராமரிப்பது, மேம்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் உறுப்பினர்களின் நடத்தை குறித்து உள் நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என்று திரு பிர்லா ஆலோசனை கூறினார். இதனால், ஜனநாயக மாண்புகள் மதிக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் அரசியல் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட திரு பிர்லா, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சித்தாந்தங்களையும்கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் போது ஆரோக்கியமான நாடாளுமன்ற மரபுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். பாட்னாவில் பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற 85-வது அகில இந்திய  சபாநாயகர்கள் மாநாட்டின் தொடக்க உரையில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094567

-------

TS/IR/AG/DL

 


(Release ID: 2094618) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi , Marathi