வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் வெண்மைப் பொருட்களுக்கான ரூ.3,516 கோடி முதலீட்டுடன் 24 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
Posted On:
20 JAN 2025 12:20PM by PIB Chennai
மூன்றாம் சுற்றில் மொத்தம் 24 நிறுவனங்கள் ரூ.3,516 கோடி அளவிற்கு முதலீடு செய்ய உள்ளதையடுத்து, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் குளிர்சாதனக் கருவிகள், எல்.ஈ.டி விளக்குகள் போன்ற வெண்மைப் பொருட்கள் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கென தயாரிக்கப்பட்ட பட்டியலில் 3-வது சுற்றில் மொத்தம் 38 நிறுவனங்களிடமிருந்த ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பிறகு 18 புதிய நிறுவனங்களை மத்திய அரசு தற்காலிகமாக தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனங்களில் 10 குளிர்சாதன உற்பத்தியாளர்களாகவும் 8 எல்இடி விளக்குகள் தயாரிக்கும் நிறுவனங்களாகவும் உள்ளனர். ரூ.2,299 கோடி முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
கூடுதலாக, உற்பத்தியுடன் கூடிய திட்டத்தின் கீழ் தற்போது செயல்பட்டு வரும் ஆறு நிறுவனங்கள் தகுதி நிலை உயர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ரூ.1,217 கோடி முதலீடு செய்ய உறுதி செய்துள்ளன.
தற்போதைய இரண்டு நிறுவனங்கள் உட்பட 13 விண்ணப்பதாரர்கள் பரிசீலனைக்காக நிபுணர் குழுவிற்கு அனுப்பப்பட்டு அவர்களது பரிந்துரைகளின்படி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.இதனையடுத்து வெண்மைப் பொருட்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் 84 நிறுவனங்கள் ரூ.10,478 கோடி அளவிற்கு முதலீடுகளைக் கொண்டு வர உள்ளன. இதன் விளைவாக ரூ.1,72,663 கோடி அளவிற்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094465
-----
TS/SV/KPG/KR
(Release ID: 2094541)
Visitor Counter : 46