அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விண்வெளியில் விண்கலங்கள் இணைப்பு- அபாரமான சாதனையை இஸ்ரோ சாதித்துள்ளது: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
16 JAN 2025 7:16PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளியில் செயற்கைகோள்கள் ஒருங்கிணைப்பு முயற்சியை (SpaDeX) வெற்றிகரமாக மேற்கொணடதற்காக இஸ்ரோவுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களை வாழ்த்தியுள்ள அவர், இந்திய விண்வெளி நிலையம் உள்ளிட்ட எதிர்கால பணிகளுக்கு இது வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.
சந்திரயான் 4, ககன்யான் உள்ளிட்ட லட்சிய எதிர்கால பயணங்களை சீராக நடத்த இது வழி வகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடர்ச்சியான ஆதரவு இஸ்ரோவின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது என்றும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093536
***
TS/PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2093564)
आगंतुक पटल : 84