தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
'தரை வழி ஒளிபரப்பாளர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு'
இடுகை இடப்பட்ட நாள்:
15 JAN 2025 3:29PM by PIB Chennai
தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளுக்கான விதிமுறைகள், நிபந்தனைகளை தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 'இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்கிங் மற்றும் டவுன்லிங்கிங் செய்வதற்கான வழிகாட்டுதல்கள், 2022' என்பது ஒளிபரப்பாளர்கள் தங்கள் சேனல்களை விநியோக தள ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்கு செயற்கைக்கோள் ஊடகத்தைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது.
தொழில்நுட்பத்தின் முன்னேற்றம், ஒளிபரப்பாளர்கள் தங்கள் தொலைக்காட்சி சேனல்களை விநியோகத்தள ஆபரேட்டர்களுக்கு தரைவழியாகவும் வழங்குவதை சாத்தியமாக்கியுள்ளது. அதாவது கம்பி மூலம் (எடுத்துக் காட்டு- கண்ணாடி இழை நார் ) அல்லது கம்பி அல்லாதவை(எடுத்துக்காட்டு-செல்லுலர், வைஃபை)போன்ற தரைவழி தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஒரே நேரத்தில் பல விநியோகஸ்தர்களுக்கு ஒளிபரப்பிற்கான கட்டமைப்புகளை கொண்டு செல்ல இது வழி வகை செய்கிறது. இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, சேவை வழங்குநர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதற்கான கட்டமைப்புகள் நிறுவப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்தப் பரிந்துரைகள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் (www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093065
-----
TS/SV/KPG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2093103)
வருகையாளர் எண்ணிக்கை : 89