புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2024 டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (2012 ஆண்டில் 100 என்ற அடிப்படையில்)
Posted On:
13 JAN 2025 4:00PM by PIB Chennai
I. முக்கிய சிறப்பம்சங்கள்
ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2023 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 5.22 சதவீதமாக (தற்காலிக கணக்கீடு) உள்ளது. ஊரக, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதங்கள் முறையே 5.76% மற்றும் 4.58% ஆகும்.
2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 8.39% ஆகும். கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 8.65% மற்றும் 7.90% ஆகும். கடந்த 13 மாதங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (பொது) மற்றும் நுகர்வோர் உணவு விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதங்கள் தனி அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. 2023 டிசம்பர் மாதத்திற்கு பிறகு, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் (பொது) மற்றும் நுகர்வோர் உணவுப் பொருள் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டிற்குமான பணவீக்க விகிதம் 2024 மே மாதம் வரை குறைந்து வந்துள்ளதைக் காணமுடியும். நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (பொது) 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மிகக் குறைந்த புள்ளியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2024 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (பொது), உணவு பணவீக்கம் விகிதம் கடந்த நான்கு மாதங்களை விட குறைவானதாக உள்ளது.
2024 டிசம்பர் மாதத்திற்கான வருடாந்திர வீட்டு பணவீக்க விகிதம் 2.71% ஆகும். 2024 நவம்பர் மாதத்திற்கான பணவீக்க விகிதம் 2.87% ஆக இருந்தது. வீட்டுவசதி குறியீடு நகர்ப்புறங்களுக்கு மட்டுமே தொகுக்கப்படுகிறது.
2024 டிசம்பர் மாதத்தில் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், பருப்பு வகைகள், தயாரிப்புகள், சர்க்கரை, மிட்டாய், தனிப்பட்ட பராமரிப்பு, தானியங்கள் போன்றவற்றில் இந்த வீழ்ச்சி காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092477
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2092567)