சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஜிஆர்ஏபி மீதான சிஏக்யூஎம் துணைக் குழு தில்லி தேசிய தலைநகர் பகுதியில் திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் கட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது
Posted On:
12 JAN 2025 5:33PM by PIB Chennai
தில்லியின் காற்றுத் தர சராசரி குறியீடு (AQI) தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 2 மணியளவில் அது 281 ஆகவும், 3 மணிக்கு 279 ஆகவும் பதிவானது. இது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வழங்கிய 4 மணி நிலவரத்தில் 278 ஆக மேலும் மேம்பட்டது. தில்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தில்லி, அருகிலுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் (CAQM -சிஏக்யூஎம்), தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP) மீதான துணைக் குழு இன்று கூடியது.
இந்தப் பிராந்தியத்தில் தற்போதைய காற்றின் தர சூழ்நிலை, வானிலை நிலைமைகளுக்கான கணிப்புகள், வானிலை ஆய்வு மையம் வழங்கிய காற்றின் தரக் குறியீடு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தது, அதன்படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பொருத்தமாக எடுக்கப்பட்ட திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் கட்டம் 09.01.2025 முதல் முழு தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (NCR) நடைமுறையில் உள்ளது. தில்லி-தேசிய தலைநகரப் பகுதியின் ஒட்டுமொத்த காற்றின் தர அளவீடுகளை விரிவாக ஆய்வு செய்த துணைக் குழு சில முடிவுகளை எடுத்துள்ளது.
தில்லி பகுதியில், மழை, சாதகமான வானிலை நிலைமைகள் காரணமாக தில்லியின் காற்றுத் தரக் குறியீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தில்லியின் காற்றின் தரக்குறியீடு இன்று மாலை 4:00 மணிக்கு 278 ஆக பதிவாகியுள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவுகளின்படி மூன்றாம் கட்டத்தை செயல்படுத்துவதற்கான 350 புள்ளிக்கு கீழே 72 புள்ளிகள் குறைந்துள்ளது.
ஆகையால், திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் நிலை -III-ன் கீழ் கட்டுப்பாடுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜிஆர்ஏபி மீதான சிஏக்யூஎம் துணைக் குழு இன்று திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக திரும்ப பெற ஒருமனதாக முடிவு செய்தது.
அதே சமயம், திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் II, I நிலைகளின் கீழ் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு, முழு தலை நகர் பகுதியில் சம்பந்தப்பட்ட அனைத்து முகவர்களாலும் கண்காணிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படும்.
இந்த துணைக்குழு, காற்றின் தர சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து, தில்லியில் உள்ள காற்றின் தரம், வானிலை நிலைமைகள், இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள காற்றின் தரக் குறியீடு ஆகியவற்றைப் பொறுத்து பொருத்தமான முடிவுகளுக்காக அவ்வப்போது நிலைமையை ஆய்வு செய்யும்.
***
PLM/DL
(Release ID: 2092289)