சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் : 2024-ம்ஆண்டு செயல்பாடுகள்
Posted On:
09 JAN 2025 5:51PM by PIB Chennai
பாரத்மாலா பரியோஜனா போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 60% வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ல் 91,287 கிமீ ஆக இருந்த நெடுஞ்சாலை தற்போது 146,195 கிமீ ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அதிவேக வழித்தடங்கள் 2014-ல் 93 கிலோமீட்டராக இருந்தது தற்போது 2,474 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நாடுமுழுவதும் ரூ.50,655 கோடி செலவில் 936 கிலோமீட்டர் நீளமுள்ள 8 முக்கிய தேசிய அதிவேக வழித்தடத் திட்டங்களை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
சுங்கம் இயக்குதல் மற்றும் பரிமாற்ற மாதிரியைப் பின்பற்றி சொத்து பணமாக்குதலின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.15,968 கோடி எட்டியுள்ளது. 11,12,13&14 சுங்கச் சாவடி தொகுப்புகளை பணமாக்கியதன் மூலம் இத்தொகை கிடைத்தது. இதுவரை இவ்வகையில் மொத்தம் ரூ.42,334 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
பாரத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக 35 பல்வகை பொருள் போக்குவரத்து பூங்காக்களின் கட்டமைப்பை உருவாக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
நாட்டில் செயல்பாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களுடனும் இணைப்பை உறுதி செய்வதற்காக, தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை விரிவான துறைமுக இணைப்பு பெருந்திட்டத்தை சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன்படி 1,300 கிமீ நீளமுள்ள 59 முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை அர்ப்பணித்து இணைப்பை மேம்படுத்தி அனைத்து பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி உதவி செய்து வருகிறார்.
ஓகா பெருநிலப்பகுதியையும் பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2,320 மீட்டர் நீளமுள்ள கம்பிவட சுதர்சன் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்தப் பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலா தலமாகவும் அமையும்.
தேசிய தகவல் மையம் உருவாக்கிய அகில இந்திய சுற்றுலா அனுமதி தொகுதி, சுற்றுலாப் பயணிகளையும் அவர்களின் பொருட்களையும் சுற்றுலா வாகன ஆபரேட்டர்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல அனுமதிக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்குகிறது. போக்குவரத்தை மேம்படுத்துகிறது. பலவகை அனுமதிகளின் தேவையை நீக்குவதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கிறது.
மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது
பழைய வாகனங்களை உடைக்கும் திட்டத்தின் கீழ் (16.12.2024 நிலவரப்படி), 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 80 பதிவு செய்யப்பட்ட வாகனங்களை உடைக்கும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 66 கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து சரி செய்வதற்கு உயர் முன்னுரிமை அளித்தல், பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவையும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் முன்முயற்சிகளில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091508
-----
TS/SMB/KPG/DL
(Release ID: 2091559)
Visitor Counter : 25