கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரைக் கொண்டுவரும் புந்தேல்கண்ட்டின் உருமாற்றத்தை மகா கும்பமேளா 2025 எடுத்துக் காட்டுகிறது

Posted On: 09 JAN 2025 5:12PM by PIB Chennai

உலகெங்கிலும் இருந்து 40-45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளா 2025-ல் கலந்து கொள்வார்கள். சுத்தமான மற்றும்  பாதுகாப்பான நீர் கிராமங்கள் என்ற கருத்தாக்கத்தின் மூலம் உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை பக்தர்கள் காண்பார்கள். 'குடிநீருக்கான தீர்வு: எனது கிராமத்தின் புதிய அடையாளம்' என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஒரு காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டிருந்த புந்தேல்கண்ட், இப்போது குடிநீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் வெற்றியின் அடையாளமாக எவ்வாறு நிற்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு வழிகாட்டுதலின்கீழ், ஜல் ஜீவன் இயக்கம் நீர் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, புந்தேல்கண்ட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்வழி நீரைக் கொண்டு வந்துள்ளது. குமபமேளாவின்

47 நாட்களில் பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். இது புந்தேல்கண்ட்டின் கிராமப்புற பெண்களுக்கு அவர்களின் மாற்றத்தின் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பண்டா, ஜான்சி மற்றும் சித்ரகூட் கிராமங்களில் முன்பு நீர் பற்றாக்குறையால் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது. இப்போது திருமணங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது போன்ற வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களும் இந்தப் பகிர்தலில் அடங்கும்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் அந்தந்த கிராமங்களில் தண்ணீர், குழாய் இணைப்புகள் மற்றும் நீர் வழங்கல் நிலை பற்றிய நிகழ்நேர தகவல்களை ஒரே கிளிக்கில் அணுக டிஜிட்டல் கார்னரைப் பயன்படுத்தலாம். இந்த முயற்சி பாரம்பரியம், தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மஹாகும்பமேளா 2025-ல் கலந்து கொள்ளும்  கோடிக்கணக்கானவர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

-----

TS/PKV/KV/KR/DL


(Release ID: 2091555) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi , Marathi