மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் நல்சார் பல்கலைக்கழகம் விலங்குகள் நல பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்க ஹைதராபாத்தில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

Posted On: 09 JAN 2025 4:47PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் சட்டப்பூர்வ அமைப்பான இந்திய விலங்குகள் நல வாரியம் ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வாரியத்தின் தலைவர் டாக்டர் அபிஜித் மித்ரா மற்றும் நல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீகிருஷ்ணா தேவ ராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

விலங்குகள் கொடுமையைத் தடுப்பதற்கான மாவட்ட சங்கம் (எஸ்.பி.சி.ஏ) மற்றும் மாநில விலங்குகள் நல வாரியங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் சிவில் சமூக உறுப்பினர்களுக்கு உயர்தர, தொழில்முறை சட்ட பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டாண்மையை புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படுத்துகிறது. இந்திய விலங்குகள் நலவாரியம்  மற்றும் ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகம் இடையேயான இந்த ஒத்துழைப்புகௌரவ விலங்கு நல பிரதிநிதிகளின் விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் கல்வியை வழங்க உதவும்.

மேலும்  விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091457   

***

TS/PKV/KV/KR/DL


(Release ID: 2091517) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi , Telugu