தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

Posted On: 08 JAN 2025 6:37PM by PIB Chennai

"அடுத்த 25 ஆண்டுகளின் அமிர்த காலத்திற்குள் தேசம் நுழைந்துள்ளது. இந்தப் பயணத்தில் நமது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மகத்தான இடம் உண்டு. இந்தியாவின் தனித்துவமான உலகளாவிய பார்வை மற்றும் உலக ஒழுங்கில் அதன் முக்கியப் பங்கு உங்களால் பலப்படுத்தப்படும்.

-பிரதமர் திரு நரேந்திர மோடி

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 9-ம் தேதி கொண்டாடப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அளித்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த மாநாடு முதன்முதலில் 2003-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அரசின் கீழ் நிறுவப்பட்டது. இது வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தை அங்கீகரிப்பதற்கும், ஈடுபடுவதற்கும் ஒரு தளமாக இருந்தது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம் என்பது வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மை நிகழ்வாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்காக வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. 2015 முதல், இது ஒரு இருபது ஆண்டு நிகழ்வாக உருவாகியுள்ளது, இடைப்பட்ட ஆண்டுகளில் கருப்பொருள் அடிப்படையிலான மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த வடிவம் ஆர்வமுள்ள குறிப்பிட்ட துறைகளில் அதிக கவனம் செலுத்தும் விவாதங்களை அனுமதிக்கிறது மற்றும் உலகளாவிய இந்திய வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே கட்டமைப்பு வாய்ப்புகளை வழங்குகிறது.

18-வது மாநாடு - 2025

18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு 2025 ஜனவரி 8-10 தேதிகளில் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெறுகிறது.  இந்த ஆண்டுக்கான கருப்பொருள் " வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு" என்பதாகும்.

இந்த நிகழ்வு பல முக்கிய அம்சங்களுடன் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுவாழ் இந்திய இளைஞர்கள்  தினத்தை

வெளியுறவு அமைச்சர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் மற்றும் ஒடிசா முதலமைச்சர் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

-ஒடிசாவைச் சேர்ந்த வெளிநாடுவாழ் இளைஞர்கள் தங்கள் வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு தளமாக இது இருக்கிறது.

18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டின் தொடக்க விழா:

மாநாட்டின் தலைமை விருந்தினர் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி

தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்கப் பயணத்தை காணொலி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். இந்த ரயில் மூன்று வார காலத்திற்கு இந்தியாவில் உள்ள சுற்றுலா மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும். வெளிவிவகார அமைச்சகத்தின் பிரவாசி தீர்த்த தர்ஷன் திட்டத்தின் கீழ் பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டில் நான்கு கண்காட்சிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்:

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வரும் 10-ம் தேதி நிறைவுரை ஆற்றி, பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளை வழங்குவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2091229   

***

TS/PKV/AG/DL


(Release ID: 2091281) Visitor Counter : 47