புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் - 2024-25

Posted On: 07 JAN 2025 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) 2024-25-ம் நிதியாண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்கூட்டிய மதிப்பீடுகளையும், அதன் செலவின அம்சங்களையும் நிலையான (2011-12) நடப்பு விலைகளின் அடிப்படையில்  வெளியிடுகிறது. பொருளாதார நடவடிக்கைகள், ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் செலவினக் கூறுகளின் அடிப்படையில் மாறுபடும். இதன்படி 2022-23, 2023-24, 2024-25 நிதியாண்டுகளுக்கான மொத்த  நிகர தேசிய வருமானம், தனிநபர் வருமானம் ஆகியவற்றின் வருடாந்திர மதிப்பீடுகளை இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்

2023-24-ம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீட்டில்  8.2% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.4. சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் 9.6% வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் 2024-25 நிதியாண்டில் 9.7% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090875

-----

TS/SV/KPG/DL


(Release ID: 2090949) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi