மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ. 50 கோடி மதிப்பில் 50 மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
Posted On:
06 JAN 2025 12:15PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின்கீழ் உள்ள மீன்வளத் துறையானது பிரதமரின் மீன்வள திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வடகிழக்கு பிராந்திய மாநிலங்கள் கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர்கள் திரு. ஜார்ஜ் குரியன், பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மகலந்து கொண்டனர்.
வடகிழக்கு பிராந்தியத்தில் மீன்வளத் துறைக்கு மிகப் பெரும் அளவில் ஊக்கமளிக்கும் வகையில், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ .38.63 கோடி உட்பட மொத்தம் ரூ .50 கோடி செலவில் 50 பயனுள்ள திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். இந்த முயற்சிகள் பிராந்தியத்தின் மீன்வள உள்கட்டமைப்பு, உற்பத்தித்திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.
அசாமில்இந்த திட்டங்களில் குறிப்பிடத்தக்கது தர்ராங் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்காவை நிறுவுவதாகும். இது ஆண்டுதோறும் 150 மெட்ரிக் டன் மீன்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ₹ 10-15 கோடி வருவாயை ஈட்டித் தரும். 2,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். கம்ரூப் மாவட்டத்தில் ஒரு பெரிய மீன் தீவன ஆலை ஆண்டுதோறும் 20,000 மெட்ரிக் டன் தீவனம் உற்பத்தி செய்யும். அதே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குஞ்சு பொரிப்பக திட்டங்கள் ஆண்டுக்கு 50 மில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இது உள்ளூர் மீன்வளர்ப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090476
***
TS/IR/AG/KR
(Release ID: 2090574)
Visitor Counter : 26