பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (கேட்) நீதித்துறை மற்றும் நிர்வாக உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
प्रविष्टि तिथि:
06 JAN 2025 1:42PM by PIB Chennai
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையானது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (கேட்) 05 நீதித்துறை உறுப்பினர், 04 நிர்வாக உறுப்பினர் காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்க 05.12.2024 தேதியிட்ட இரண்டு காலியிட சுற்றறிக்கைகளை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15 ஜனவரி 2025 மாலை 5.30 மணி.
இத்துறையின் இணைய தளத்திலும் (www.dopt.nic.in), மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் இணைய தளத்திலும் (www.cgat.gov.in) தகுதி, நிபந்தனைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பலாம் அல்லது சிஆர், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, கேட் எண் 5, வடக்கு பிளாக் என்ற முகவரியில் நேரிலும் ஒப்படைக்கலாம். பணியில் உள்ள அலுவலர்கள் தங்கள் பதவி கட்டுப்பாட்டு அதிகாரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தங்கள் விண்ணப்பங்களை நேரடியாக அனுப்பலாம்.
***
(Release ID: 2090521)
TS/SMB/RR/KR
(रिलीज़ आईडी: 2090566)
आगंतुक पटल : 66